எமது தூர நோக்கு

நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்த திறமையான பொதுச் சேவையின் மூலம் 2030-ல் சிறந்த கோட்டச் செயலகமாக உருவெடுத்தல்.

எமது பணி

"மாநிலக் கொள்கைகளுக்கு இணங்க, ஊழலற்ற, வெளிப்படையான, எண்ணிமப்படுத்தப்பட்ட, செயல்திறன் மிக்க மற்றும் மக்கள் நலன் சார்ந்த பொதுச் சேவையின் மூலம் அப்பகுதி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல்."

 

நாகொட பிரிவின் வரலாற்று ரீதியான அபிவிருத்தி

* ( முன்பு வருமான அலுவலகமாக அழைக்கப்பட்ட ) இந் நிறுவனம் 1968லிருந்து நாகொட பிரதேச செயலகமானது.

*  நாகொட பிரதேச செயலகப் பிரிவின் மிகச் சிறிய நிர்வாக  பிரிவான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் 1981-1990 வரை பின்வருமாறு பரவியுள்ளன.

 

 ஆண்டு                  பிரிவுகளின் எண்ணிக்கை

*  1981                  -              17

*  1990                  -               53

புவியியல்ரீதியான  அமைவு

காலி மாவட்டத்தின் மத்திய நிலையில் இருந்து தொடங்கி கிழக்கு எல்லை வரை நாகொட பிரதேச செயலாளர் பிரிவின் அமைவை காட்டுகின்றது. இப் பிரிவு கங்கபட பற்று, வடக்கு என்ற பெயராலும் அழைக்கப்படும்.

கிழக்கு நெடுங்;கோடு 80 - 140  முதல்  80 - 240   இடையிலும்,

வடக்கு அகலக்கோடு 60 - 80   முதல்   60 - 170   இடையிலும்  அமைந்துள்ளது.

வடக்கில் மற்றும் வடமேற்கு திசைகளில் நியாகம பிரதேச செயலாளர் பிரிவாலும் வடகிழக்கில் தவலம பிரதேச செயலாளர் பிரிவாலும் கிழக்கில் மாத்தறை,தெற்கில் யக்கலமுல்ல பிரதேச செயலாளர் பிரிவாலும தென் மேற்கு திசையில் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவாலும் மேற்கில் வெலிவிட்டி திவித்துரை பிரதேச செயலாளர் பிரிவாலும் எல்லையாகியுள்ளது.

நாகொட பிரதேச செயலகத்தின் நில அளவு 17471 ஹெக்டயார் ஆகும். 174 சதுர கிலோமீட்டர் ஆகும். காலி மாவட்டத்தில் பரப்பளவில் இரண்டாம் இடத்தைப் பெறும் நாகொட பிரதேச செயலாளர் பிரிவு காலி மாவட்ட மொத்த பரப்பளவில் 11மூ வீதத்தை உரித்தாக்கிக்கொண்டுள்ளது.

நாகொட பிரதேச செயலாளர் பிரிவு பத்தேகம மற்றும் ஹினிதும தேர்தல் பிரிவுகளுக்கு உரித்தானது. நாகொட பிரிவில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் 53இல் 37 ஹினிதும தேர்தல் பிரிவிற்கும் 16 பத்தேகம தேர்தல் பிரிவிற்கும் உரித்தானவையாகும்.

கூகிள் வரைபடத்தில் நாகொட பிரதேச செயலகம்
 
*  அலுவலக இடம் இங்கே கிளிக் செய்யவும்
நாகொட பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் வரைபடம்
 
நாகொட பிரதேச செயலகத்தின் வரலாறு

1968 டட்லி சேனாநாயக்க அரசாங்கத்தின் உள்நாட்டலுவல்கள் பொறுப்பமைச்சர்  கலாநிதி விஜயானந்த தஹநாயக்க அவர்கள், ஹினிதும பாராளுமன்ற உறுப்பினர்  எம்.எஸ். அமரசிறி அவர்களின் அழைப்பில் முதல் முறையாக நாகொட உப அரசாங்க அதிபர் பிரிவொன்றை வேறுபடுத்தினார்.அப்போது பீ.ஏ.டீ. குணசிங்ஹ அவர்கள் காலி மாவட்ட செயலாளராக இருந்தார்.

அதற்கமைய நாகொட கிராம சபை அலுவலகத்தை நாகொட மகா வித்தியாலயத்திற்கு முன்னால் புதிய கட்டிடத்திற்கு கொண்டுச் சென்று  பழைய கிராம சபை  அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தில் பிராந்திய வருமான உத்தியோகத்தர் பிரிவை ஆரம்பிக்கப்படட்து. பத்தேகம பிராந்திய வருமான உத்தியோகத்தரை (நாகொட) கங்கபட பற்று புதிய அலுவலகத்தில் பதில் கடமையாற்றும் பிராந்திய வருமான உத்தியோகத்தராக நியமித்து, பணிக்குழு பிரதான எழுதுவினைஞர் அவர்கள் உட்பட 5 பேரைக் கொண்டு 1968 வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய பிராந்திய வருமான உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் 14 உட்பட்டன. 1968 மார்ச் மாதத்தில் நிறந்தர பிராந்திய வருமான உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.அந்த பிராந்திய வருமான உத்தியோகத்தர் பேர்ட்டி ஜயசேகர அவர்களாவார். பிற்காலத்தில் பிராந்திய வருமான உத்தியோகத்தர்,உதவி அரசாங்க அதிபர்,மற்றும் பிரதேச செயலாளர் என்ற வகையில் பின்வருமாறு உருவாகியுள்ளனர்.



 
நாகொட பிரதேச செயலகத்தில் பணியாற்றிய நிறுவன தலைவர்கள்
 
 

உத்தியோகத்தரின் பெயர்

சேவை காலம்

திரு பேர்டி ஜயசேகர

1968 - 1970.11.30

திரு ஜினதாச அபேவிக்கிரம

1971.12.01 - 1976.12.31

திரு. எச்.எல் அமரசேகர

1977.01.01 - 1979.07.31

திரு.என்.கே. ஹெட்டிஆரச்சி

1979.08.01 - 1985.02.28

திரு. எச்.கே. கீர்த்திரத்ன

1985.03.01 - 1986.09.01

திரு. ஏ.கே. சிரிசேன

1986.09.02 - 1992.01.15

திரு. கே. சமரசிங்ஹ

1992.01.16 - 1996.11.18

திரு. ஏ.ஜீ.எல். சந்திரசிங்ஹ

1997.01.01 - 2003.11.20

திரு. க.ஹே.பியதாச

2004.10.18 - 2007.07.21

திருமதி மாலனீ லொக்குபோதாகம

2007.07.22 - 2008.01.09

திரு. கே.யூ சந்திரலால்

2008.01.10 - 2010.11.21

திரு. லலிந்த கமகே

2010.12.01 - 2013.09.10

திரு. டப்ளியூ.எஸ். சத்தியானந்த

2013.09.25 - 2014.05.25

திரு. எஸ். திரிமான்ன

2014.05.26 - 2006.04.06

திரு. தம்மிக ராஜபக்ஷ

2016.04.07 - 2016.08.13

திருமதி சீ.பீ. ராஜகருணா

2016.08.14 - 2021.06.16

திரு. உபுல் தஹநாயக்க

2021.06.17 - 2024.02.07

News & Events

30
ஜூலை2026
Aesala poho program

Aesala poho program

ඇසල පොහොය  නිමිත්තෙන් සංවර්ධන අංශය මගින්  සංවිධානය...

குடியுரிமை சாசனம்

Scroll To Top